இயக்கம் பற்றி
இயல் இசை நாடகம் என செழித்த நம் தமிழ் மொழி காலத்திற்கு ஏற்ப கணினி தமிழ், அறிவியல் தமிழ் என வளர்ந்து வருவது நாம் அறிந்ததே. இந்த வழியில் கால்நடை அறிவியல் புலத்தின் வியத்தகு வளர்ச்சியை தமிழ் கூறும் நல்லுலகிற்கு கொண்டு செல்லும் முயற்சியாக கால்நடை அறிவியல் தமிழ் இயக்கம் என்கிற அமைப்பு கீழ் காணும் நோக்கங்களுடன் தொடங்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- கால்நடை அறிவியல் பட்டம் பெற்ற அனைத்து துறைகளிலும் உலகம் முழுவதும் இருக்கின்ற அனைவரையும் தமிழ் என்னும் ஒற்றைக் குடையின் கீழ் இணைப்பது.
- கால்நடை அறிவியலின் ஆராய்ச்சி முடிவுகள், கண்டுபிடிப்புகள் அனைவரும் அறியும் வண்ணம் கால்நடை வளர்ப்பு, சிகிச்சை மற்றும் நலம் சார்ந்த கருத்துக்களை தமிழ் வாயிலாக வெளியிடுவது, விரிவாக்கம் செய்வது.
- கால்நடை அறிவியலில் தமிழ்மொழியை மேம்படுத்தும் தனித்திறன் கொண்ட பேராசிரியர்கள், கால்நடை மருத்துவர்கள், கால்நடை அறிவியல் மாணவர்களை இனம் கண்டு அவர்களை ஊக்குவிப்பது அவர்களின் பணியினை மேம்படுத்தும் வகையில் செயல்படுவது.
- தமிழ் இலக்கியம், இலக்கணம், பிற நூல்களில் காணப்படும் கால்நடை அறிவியல் செய்திகளை தொகுத்து நூலாகவோ அல்லது இதழாகவோ தொடர் பிரசுரம் செய்யும் முயற்சிகளை மேற்கொள்வது.
- அயல்மொழி நூல்களில் கூறப்பட்டுள்ள கால்நடை அறிவியலை அனைவரும் எளிதில் அறியும் வண்ணம் தமிழ்மொழியில் மாற்றம் செய்வது. அதே போல் தமிழ் மொழியில் கூறப்பட்டுள்ள கால்நடை மருத்துவக் குறிப்புகளை பிறமொழிக்கு மொழிமாற்றம் செய்வதற்கான முயற்சியை முன்னெடுப்பது.
- தமிழில் எழுதப்படும் கால்நடை அறிவியல் நூல்களின் பயன்பாடு, சிறப்பு குறித்து ஆய்வு செய்வது அந்நூலை எழுதிய ஆசிரியரை கெளரவப்படுத்துவது.
- அறிவியல் ரீதியான கால்நடை வளர்ப்பு மற்றும் தொழில் நுட்பங்களை இணையத்தமிழ் வழியாக கொடுப்பது.
- ஆண்டு தோறும் தேசிய அளவில் கால்நடை அறிவியல் கருத்தரங்கம், பயிற்சி வகுப்புகள் நடத்துவது மற்றும் தமிழ்மொழி வளர்ச்சிக்கு தொண்டாற்றுபவர்கள், செம்மையாக செயலாற்றுபவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு விருதுகள், பாராட்டு பத்திரங்கள் வழங்குவது.
- முனைவர். வே.ஞானபிரகாசம்
- முனைவர். ந.பலராமன்
- முனைவர். ப.தங்கராஜீ
- முனைவர். இரா.பிரபாகரன்
- மருத்துவர். ச.சுப்பையா, இ.ஆ.ப
இவ்வியக்கத்தில் வாழ்நாள் உறுப்பினராக தங்களை அன்புடன் வரவேற்கிறோம். வாழ்நாள் உறுப்பினர் மாதிரி விண்ணப்ப படிவம் இணைக்கப்பட்டுள்ளது. வாழ்நாள் சந்தா ரூ. 1,150/- (ரூபாய் ஆயிரத்து நூற்றி ஐம்பது மட்டும்). வாழ்நாள் உறுப்பினர் சந்தா தொகையினை 'Kalnadai Ariviyal Thamil Iyakkam' என்ற பெயரில் காசோலை அல்லது பண விடை மூலம் (Payable at Tirunelveli) எடுத்து பொதுச் செயலாளர், கால்நடை அறிவியல் தமிழ் இயக்கம், கால்நடை உற்பத்தி மேலாண்மைதுறை. சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி, வேப்பேரி, சென்னை-7. என்ற முகவரிக்கு அனுப்பவும்
அல்லது யூனியன் பாங்க் ஆப் இந்தியா, மேலப்பாளையம்
வங்கி கணக்கு எண் : 561702010088695
IFSC : UBIN0556173
பணப்பரிமாற்றம் செய்து தகவலை செயலாளருக்கு தெரியபடுத்தவும்
தலைமை புரவலர் : முனைவர். சி.பாலசந்திரன்
துணை புரவலர் : முனைவர். பா.டென்சிங் ஞானராஜ்
மருத்துவர். வே.மணிவண்ணன்
புரவலர்கள்